
ரயிலில் மோதி ஒருவர் பலி
காலி – பட்டிப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தியதலாவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பெரகும்புர – அம்பேவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் கடவையில் ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.