மாவீரர் தின நிகழ்வுகள்: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் காலி – பத்தேகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பத்தேக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பான படங்களை பகிர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர் உட்பட நால்வர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்