விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயம்!

கினிகத்தேன – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில்  பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேன், அருகில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதை அடுத்து, முச்சக்கர வண்டியும் பேருந்துடன் மோதி பின்னர் குறுக்கே உருண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்