நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் விநியோகம் ஆரம்பம்!

-நுவரெலியா நிருபர்-

நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டு 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

இவ் அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மூலம் காமினி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 605,292 ஆகும்.

நுவரெலியா மாவட்டத்தில் 10000 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாகவும், சுமார் 650 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 2500 பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாக்கெண்ணும் மத்தியநிலையமாக நு/காமினி மத்திய மகா வித்தியாலயமும் (தேசிய கல்லூரி ) நுவரெலியா மாவட்டத்தில் மாவட்டச் செயலகமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்ப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவே பொதுமக்கள் தமது உரித்தான வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை உரிய நேரகாலத்தில் செலுத்த வேண்டும், எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்