தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று புதன் கிழமை சஜித் பிரேமதாச செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தினார்.

இதேவேளை நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்