
மட்டக்களப்பு ஓட்டமாவடி – பதுறியா நகர் பகுதியில் நபர் ஒருவரிடம் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2 – T56 ரக துப்பாக்கிகள், அதற்கான 60 ரவைகள், 2 மகசின்கள், ஒரு வாள் மற்றும் தொலைநோக்கு கருவி என்பன குறித்த நபரிடமிருந்து இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை குழுவினால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
மார்க்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் 43 வயதான குறித்த நபர் இதுவரை எவ்வித குற்றப்பின்னணியும் இல்லாதவர் என தெரிவிக்கப்படும் நிலையில் இன்று அதிகாலை அவருடைய வீட்டிலிருந்து இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரை, பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
