நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

களுத்துறை மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 62 வயதுடைய இப்ராஹிம் சபருல்லா என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொரணை வீதியில் உள்ள ரன்னகல நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் நீராடியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்