திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருந்துப் பொருட்கள் கையளிப்பு!

-கிண்ணியா நிருபர்-

 

வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க கண் சத்திர சிகிச்சை நோயாளர்களின் நலன் கருதி குறித்த கண் வில்லைகள் (intraocular lens) வழங்கி வைக்கும் நிகழ்வு வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம். பாரிஸினால் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எல்.டபிள்யு. ஜயவிக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இவ் மருந்து சார் பொருட்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வைத்தியர் வானி பிரேம்ஜிட் குடும்பத்தார் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள
ஈஸ்வரி ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அணுசரனையில் வன்னி ஹோப் இலங்கை அலுவலகத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது

இவ் நிகழ்வில் கண் சத்திர சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர் மற்றும்
வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்