கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் விளக்கமறியல்

 

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மீளவும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலருடைய பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்