நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பேரிடர் நிகழ்ந்த இடம்(Ground Zero) பகுதியில் நிலவிய காற்றின் தரம் மற்றும் சுகாதார அபாயங்கள் தொடர்பான 170,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட முன்பு வெளியிடப்படாத ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.
இந்த ஆவணங்களில், பேரிடர் நிகழ்ந்த இடம்(Ground Zero) பகுதியில் நச்சுத்தன்மை கொண்ட தூசி மற்றும் காற்று தொடர்பான அபாயங்கள் குறித்து நகர அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல்கள் இருந்ததாகவும், அதே நேரத்தில் பொதுமக்களிடம் காற்று பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியிடப்பட்ட ஆவணங்களில் “ஹார்டிங் மெமோ(Harding Memo)” உள்ளிட்ட முக்கிய பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், 2025ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 68 பெட்டிகளில் இருந்த பதிவுகளும் இதில் அடங்குகின்றன.
இந்த ஆவண வெளியீடு, 9/11 தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி 9/11 ஹெல்த் வாட்ச்(Health Watch) மேற்கொண்ட நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களிலும் மேலும் ஆவணங்கள் வெளியிடப்படும் என நியூயோர்க் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.









