கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்தில், பாவனைக்கு உதவாத 700 அழுகிய முட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த முட்டைகளை கொத்து ரொட்டி மற்றும் ரய்ஸ் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்த வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.