70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பேரன்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் உறவினருக்கு ஜூன் 7ஆம் திகதி திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத்தினர் அனைவரும் திருமண நிகழ்விற்கு சென்றுள்ளனர். மூதாட்டி உடல்நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலேயே தங்கியுள்ளார்.

மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட உறவுக்கார இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் அங்கு வந்து தனியாக இருந்த பாட்டியின் வீட்டிற்குள் புகுந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில் மூதாட்டியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த ஒரு உறவுக்கார பெண் ஓடோடி வந்துள்ளார். இதை அறிந்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

ரத்தன்கர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த பாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், தலைமறைவான இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்