ஹொரபேயில் ரயிலின் மேற்பகுதியில் இருந்து பயணித்த நிலையில் கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த 13 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக நேற்று நெவ்வாய்க்கிழமை 119 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி நேற்று இரவு வெளியிட்டார்.
அதேநேரம் பல ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி : ரயிலின் மேற்பகுதியில் இருந்து பயணித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி