4 விக்கெட்டுக்களால் சிம்பாப்வே அணி வெற்றி
ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சிம்பாவேவின் ஹராரே விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்தநிலையில் 145 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்