4 பெண்கள் உட்பட 40 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட காரணங்கால் 138 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதன்போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், மன்னா கத்தி, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்