380 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை 10 ஆம் கட்டை பகுதியில் போதை மாத்திரைகளை தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி இ.எம்.பியரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவினருடன் குறித்த பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 380 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நாளை புதன் கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்