2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் 87 விமானங்கள் இரத்து!

தெற்கு ஜப்பான் – கியூஷூ தீவில் அமைந்துள்ள மியாஸாக்கி விமான நிலையத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

2ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக வெடிகுண்டு அகற்றும் குழு உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் மியாஸாக்கி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன் 87 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்