வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு
வவுனியா கொக்குவெளி பகுதியில் வீட்டு காணியில் இருந்து 9 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப் பகுதியில் முதலை உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டாரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து முதலையை பிடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News