16 வயது சிறுமி நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு

களுத்துறை தெற்கு காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் மார்கத்துக்கு அருகில் நிர்வாண நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமி, மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் விடுதிக்கு சென்றுள்ளதுடன் அவர்கள் விடுதியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் சிறுமியுடன் இருந்த மற்றைய இளைஞரும் வெளியேறியமை முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த சிறுமி பொலிஸாரால் விடுதியின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்படடுள்ளார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்தக் குழுவில் உள்ள மற்றைய ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞனைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்