15 இலட்சம் ரூபா மோசடி செய்த வேட்பாளர் கைது!
-யாழ் நிருபர்-
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர், நிதி மோசடியில் ஈடுபட்டமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குறித்த வேட்பாளர், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றிய நிலையில், யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்