13 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில், கல்வி பயிலும் மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியரை, கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி, 13 வயதுடைய குறித்த மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 52 வயதுடைய ஆசிரியர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, நேற்று புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோப்பாய் பொலிஸார் சந்தேக நபரான ஆசிரியரை, இன்று வியாழக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க