1000 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடைந்த கால அவகாசத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8361 வேட்பாளர்களிடமிருந்தும் மொத்தம் 7412 வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுயேச்சை அரசியல் குழுக்களில் போட்டியிட்ட 690 வேட்பாளர்களிடமிருந்து 493 செலவு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

பெயரிடப்பட்ட 527 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில், 434 நபர்கள் மட்டுமே தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை கையளித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்