வேட்பு மனு நிராகரிப்பை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி மனுத் தாக்கல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஜனநாயகத் தேசிய முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டமையை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கட்சியின் சார்பில் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்ட சிலர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்