வெந்தயம் பயன்கள்
💥 நமது அன்றாடம் சமையலில் ஒரு முக்கிய பொருள் தான் வெந்தயம். இது பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன.
💥மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ போன்றவைகளும் அடங்கியுள்ளன. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருளாகும்.
📌 சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.
📌உடலில் ஏற்படும் அதிகப்படியான வீக்கத்தை வெந்தயம் போக்கும். வெந்தயத்தில் பிளாவனாய்ட்ஸ் இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும்.
📌செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
📌வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகளவு உள்ளது என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இந்த மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.
📌ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை தூண்டுவதற்கு வெந்தயம் மிகவும் உவுகிறது. வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அது இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். வெந்தயம் உடலின் இரத்த அழுத்தத்தையும் கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது.
📌செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
📌உடல் சூட்டினால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். மேலும் உடம்பு சூடு பிடிப்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.
📌வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதனால் அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது.
📌வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.
📌தினமும் வெந்தயம் சாப்பிட்டு வருவதால், முடி நன்றாக வளரும்.
📌வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
📌பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும்.
📌உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
வெந்தயம் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்