வெலிகம கடற்கரை வீதியில், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில், 42 வயதுடைய வெளிநாட்டவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ஜீப், வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது மோதியுள்ளது.
பலத்த காயமடைந்த குறித்த வெளிநாட்டவர், உடனடியாக மீட்கப்பட்ட வலன வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.