
வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சிகிச்சை நிறைவடைந்ததும் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.