மட்டக்களப்பு : நீர்வாழ்த்தாவரங்கள் படர்ந்துள்ளமையால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு : நீர்வாழ்த்தாவரங்கள் படர்ந்துள்ளமையால் விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கமநல சேவை பிரிவிக்குட்பட்ட குருக்கள்மடம், நரிப்புல் வெட்டுவான், கண்ட மரத்தடி விவசாய நிலங்களுக்குள் ஆற்றுவாழை, சல்வீனியா மற்றும் நீர்வாழ்த்தாவரங்கள் அதிகம் படர்ந்துள்ளமையால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறுபோக விவசாயிகள் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு ஏக்கருக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் 100 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் காணப்படுகின்றதை அவதானிக்க முடிகிறது.

மட்டக்களப்பு வாவியின் அணைக்கட்டு உப்பு நீர் தடுப்பு கட்டு இல்லாத காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பத்தில் நீர்வாழ் தாவரங்கள் நிறைந்து காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இதனால் விசாயத்திற்குரிய காலம் பிந்தி விதைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்