கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் மயில்கள் – 4.24 மில்லியன், குரங்குகள் – 1.74 மில்லியன், மர அணில்கள் – 2.26 மில்லியன், செங்குரங்குகள் – 5.17 மில்லியன் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஏ.எஸ் சண்டிக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கணக்கெடுப்பிற்காக 2.7 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, விவசாய பணிப்பாளர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.