விடுமுறையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பரிதாபமாக உயிரிழப்பு!
பதுளை நிருபர்-
மஹியங்கனை லொக்கல்ல ஓயா பகுதியில், நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பகுதியை சேர்ந்த, அராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், 57 வயதான பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது கடமைகளை முடித்துக்கொண்டு, மூன்று நாள் விடுமுறையில், தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, லோக்கல்ல ஓயா பயோமாஸ் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்கு முன்னால், அவரது மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்து, மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்