களுத்துறை – மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது மற்றொரு குழுவினர் வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதை அடுத்து நேற்று புதன் கிழமை இரவு இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை மற்றும் மகன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு மகன் உயிரிழந்துள்ளார்.
யடிதோல, நாவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகன் உயிர் இழந்துள்ளதுடன் 51 வயதுடைய தந்தை படுகாயமடைந்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.