இரத்தினபுரி பெல்மடுல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.