வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றிருந்த போது அதில் கலந்துகொள்ளச்சென்ற 2. மாணவர்கள் நீர்க்குழியில் விழுந்து மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இரண்டாவது தினமான இன்று வியாழக்கிழமை போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.
மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிறிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பல்கலைக்கழக மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்ட இரு மாணவர்களும் வவுனியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதேவேளை சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் மீதும் இறந்த மாணவர்களது உறவினர்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்களும் அதிகமாக பிரசன்னமாகி இருந்தமையால் இரு பகுதியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படவும் ஊடகவியலாளர்கள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இணைந்து இருதரப்பினரையும் சுமூக நிலைக்கு கொண்டுவந்திருந்ததுடன் துனைவேந்தரை பாதுகாப்பாக அப்பகுதியிலிருந்தும் அழைத்து சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14வயது மற்றும்,15வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளார்கள் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பூவரங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்