மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் தொடர்பான வாக்குவாதத்தில் அயலவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற இச்சம்பத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி துப்பாக்கியுடன் வவுணதீவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கன்னங்குடா பாடசாலை வீதியைச் சேர்ந்த பாக்கியராசா சதீஸ்கரன் (வயது-28) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின்; வீட்டுக்கு அருகிலுள்ள அவரது சகோதரனின் காணியில் குடிநீருக்காக தேசிய நீர்வழங்கல் சபையினால் குடிநிரை பெற்றுள்ள குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும் , துப்பாக்கி பிரயயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்த நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினரால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது இந்த நிலையில் சம்பவதினம் பிற்பகல் 4.30 மணிக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியினால் பக்கத்து அயலவர் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவர் துப்பாகியுடன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.