-பதுளை நிருபர்-
பதுளை விஹாரகொட பிரதேசத்தில் வலம்புரி ஒன்றினை 03 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இரவு நுவரெலியா விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, கிரீன்லேன் ட்ரைவ் வீதி, இலக்கம் 02 இல் வசிக்கும் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் வலம்புரி ஒன்றை விற்பனை செய்ய தயாராகி வருவதாக நுவரெலியா விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, அதனை கொள்வனவு செய்யும் நபர் போல் ஒருவரை நியமித்து கொள்வனவு செய்ய முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் வலம்புரி சங்குடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்