லங்கா சத்தோசவின் அதிரடி விலை குறைப்பு
லங்கா சத்தோச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் பாசிப்பயறு விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,225 ரூபா.
ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாயின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1,290 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பருப்பு கிலோ 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், சிவப்பு நாட்டரிசி கிலோ 200 ரூபாவாகவும், நெத்தலி கிலோ 1,140 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மா 200 ரூபாவாகவும், சோயா மீட் கிலோ 650 ரூபாவாகவும், சிவப்பு அரிசி கிலோ 139 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 540 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்