
ரொஷான் மஹாநாமா திடீர் பதவி விலகல்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாமா தேசிய விளையாட்டு பேரவையின் (NSC) உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக விலகியுள்ளார்.
இவர் கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி தேசிய விளையாட்டு பேரவையின் (NSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலும் பெப்ரவரி 20ஆம் திகதி அவர் முறையாக அந்தப் பதவியை பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ரொஷான் மஹாநாமா அறிவித்துள்ளார்.
