இலங்கையிலிருந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களை மீட்டுத் தருமாறு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கச்சேரியைச் சேர்ந்த அதிர்ஸ்டராஜ் கோமஸ் மிதிசன்(வயது – 24), கரவெட்டியைச் சேர்ந்த சுயனிகாந் பகீரதன் (வயது -21) , முல்லைத்தீவைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் (வயது – 46) , யாழ். குருநகரைச் சேர்ந்த கீதபொன்பலம் பிரதாப் (வயது – 37) மற்றும் ஸ்ரீபன் சுரேஸ் (வயது – 31) ஆகியோர் ஏமாற்றப்பட்டு ரஷ்யா இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள, அவர்களுடைய புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே இவர்களை இந்த நாட்டுக்கு மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சபையில் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்.