ரஷ்யாவும் வடகொரியாவும் தங்களது பகிரப்பட்ட எல்லையில் உள்ள டுமென் (Tumen) ஆற்றின் மீது கட்டப்பட்ட முதல் சாலைப் பாலத்தை செப்டம்பர் 7ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளன.
சுமார் 1 கிலோமீட்டர் நீளமும், இரு வழித்தடங்களும் கொண்ட இந்தப் பாலம், ரஷ்யாவின் கசான் (Khasan) பகுதியையும் வடகொரியாவின் ராசோன் (Rason) பகுதியையும் இணைக்கிறது. தினமும் சுமார் 300 வாகனங்கள் இதன் வழியாகச் செல்ல முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தப் பாலம் வர்த்தகம், சுற்றுலா, பொருட்கள் பரிமாற்றம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. பயணிகள் போக்குவரத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா–வடகொரியா இடையே ஏற்கனவே 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில் பாலம் இருந்தாலும், இரு நாடுகளையும் நேரடியாக இணைக்கும் பிரத்யேக சாலைப் பாலம் இதுவே முதல் முறையாகும். உக்ரைன் போர் பின்னணியில் இரு நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் நெருக்கமடைந்து வரும் நிலையில், இந்தப் புதிய பாலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.











