ரயில் நிலைய அதிபர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாளை செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்காவிட்டால், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
மேலும், வேலைநிறுத்தத்தைத் தொடர்வது குறித்து முடிவு செய்ய தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழு நாளை மறுநாள் புதன் கிழமை கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.