யாழ்ப்பாணம் வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி (வயது -19) என்ற இளம் பெண்ணே இவ்வாறு வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.