நியூயோர்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்ஸிகோ கடற்படையின் பயிற்சி படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகில் சுமார் 277 பேர் பயணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.