-திருகோணமலை நிருபர்-
மொராவெவ பிரதேசத்தில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் முகமாக ஏஎச்ஆர்சீ (AHRC) நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மொரவெவ பிரதேச சிவில் வலையமைப்பினரின் ஒத்துழைப்போடு தன்சல் வழங்கும் நிகழ்வு நேற்று சனக்கிழமை இடம்பெற்றது.
மூவின மக்களும் சேர்ந்து முன்னெடுத்த குறித்த நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நல்லிணக்கம் சார்ந்த கலந்துரையாடலுடன் குறித்த பகுதியில் தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.



