முட்டை பயன்கள்

முட்டை பயன்கள்

முட்டை பயன்கள்

⚪🟡பொதுவாக உணவுகளில் மிக ஆரோக்கியமான, அதே நேரம் எந்த பக்க விளைவும் இல்லாத ஒரு உணவு முட்டை .இந்த முட்டையை ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ அல்லது பொரித்தோ நாம் சாப்பிடலாம். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.

⚪🟡முட்டை எப்போதும் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக அமைகிறது. ஒரு முட்டையில் 13 அத்தியாவசிய வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முட்டையில் உள்ள உயர்தர புரதம் 60 விழுக்காடு முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ளது. மீதம் மஞ்சள் கருவில் இருக்கின்றன.

⚪🟡முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளிக்கின்றன.

முட்டையின் பயன்கள்

🍳முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை பராமரிக்க உதவுகிறது. மஞ்சள் கருவில் அதிக அளவு இருக்கும் Lutein மற்றும் zeaxanthin உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  கண் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும்.

🍳மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைக்க முட்டை உதவுகிறது. இதனை தினமும் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். இதனால் அவர்களின் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

🍳முட்டை புரதத்தின் நல்ல ஆதாரம் ஆகும். இவை தசைகள், உடல் திசுக்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், அவற்றை சரிசெய்யவும் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான, வலுவான தசைகளை பெற முட்டை சாப்பிட வேண்டும்.

🍳காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் மிக விரைவிலே உடல் எடை பிரச்சினை தீர்ந்து விடும்.

🍳முட்டையை இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் வீக்கம் குறையும்.

🍳முட்டையில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.  இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து அழகாக்கும்.

🍳பொதுவாக பெண்களின் 9 மாத கர்ப்ப காலங்களிலும் முட்டை சாப்பிடும் படி நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் கருவில் வளரும் குழந்தையின் பிறவி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.

🍳தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

🍳அமினோ அமிலம், ஹோமோசைஸ்டீன் போன்ற  இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க, முட்டையில் உள்ள கோலின் உதவுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

🍳முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

🍳முட்டையின் மஞ்சள் கருவில் புரதங்கள், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

முட்டை பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்