மிஸ் ஏர்த் 2023 சர்வதேச போட்டி வெற்றியாளராக சஷ்மி திஸாநாயக்க

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற மிஸ் ஏர்த் 2023 (Mrs Earth) சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், சஷ்மி திசாநாயக்கா மிஸ் ஏர்த் சர்வதேச பட்டத்தை வென்றதுடன், மிஸ் ஏர்த் பெஸ்ட் இன் கட்வோக் ( Mrs Earth Best in Catwalk), மிஸ் ஏர்த் ஓவெரோல் பெஸ்ட் இன் கௌன் (Mrs Earth Overall Best in Gown), மிஸ் ஏர்த் ஓவெரோல் பெஸ்ட் இன் ரிசார்ட் வெயார் (Mrs Earth Overall Best In Resort wear), மிஸ் ஏர்த் பெஸ்ட் இன் டெலன்ட் (Mrs Earth Best In Talent) ஆகிய அனைத்து துணைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த போட்டியில் தேசிய இயக்குனர் சரித் குணசேகர மற்றும் அவரது பயிற்சியாளர் ருக்மல் சேனாநாயக்க ஆகியோர் சஷ்மி திசாநாயக்காவுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளனர்.

மிஸ் ஏர்த் 2023 போட்டியில் பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்