புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் மின்சார கம்பத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
முந்தல் பிரதேசத்தை சேர்ந்த ராஜ் மதுஷன் (வயது – 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.