ஜனவரி 14, 2026 அன்று, மினியாபொலிஸில் “Operation Metro Surge” எனும் குடியேற்ற அமலாக்க நடவடிக்கையின்போது, குடியேற்ற அமலாக்க (ICE) அதிகாரி கிறிஸ்டியன் காஸ்ட்ரோ, வெனிசுலா குடியேறியவரான ஜூலியோ சீசர் சோசா-செலிஸை காலில் சுட்டு காயப்படுத்தினார்.
கைது செய்யும்போது, சோசா-செலிஸ் மற்றும் மற்றவர்கள் தன்னை உறைபனி துப்புரவு கருவி (snow shovel), துடைப்பம் கொண்டு தாக்கியதாக காஸ்ட்ரோ தனது மேலதிகாரிகளிடம் தெரிவித்தார்; ஆனால் கண்காணிப்பு காணொளி, சாட்சி வாக்குமூலங்கள் இதை பொய் என நிரூபித்தன
மே மாதம் மினசோட்டா மாநில குற்றச்சாட்டுகளின் கீழ் (2ஆம் நிலை தாக்குதல், பொய் புகார்) டெக்சாஸில் காஸ்ட்ரோ முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.
மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (ஜனநாயகக் கட்சி) கோரிய ஒப்படைப்பு ஆவணங்களில் (extradition) டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட் (குடியரசுக் கட்சி) கையெழுத்திட மறுத்ததால், 90 நாட்கள் சிறையில் இருந்த பின் ஆகஸ்ட் இறுதியில் காஸ்ட்ரோ விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின், FBI-க்கு பொய் தகவல் அளித்ததாக 6 குற்றச்சாட்டுகள் கொண்ட கூட்டாட்சி நீதிமன்ற குழு (federal grand jury) தீர்ப்பின் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு டெக்சாஸில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடுமையான, சிவில் உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு பரிசீலனையிலுள்ளதாக தகவல்.
“ஆளுநர் அபாட் காஸ்ட்ரோவை பாதுகாக்க முயன்றாலும், அவரை விரைவில் காண்போம்” என ஹென்னிபின் கவுண்டி வழக்கறிஞர் மேரி மொரியார்ட்டி தெரிவிப்பு.
டெக்சாஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜரான காஸ்ட்ரோ, குற்றச்சாட்டுகளுக்கு “குற்றமில்லை” எனப் பதிலளித்தார்; மினசோட்டா நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டும்.










