பதெனிய – அனுராதபுரம் வீதியின் கெட்டபஹுவ பகுதியில் அம்பியூலன்ஸ் வாகனம் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 55 வயதுடைய அம்பியூலன்ஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகலேவ வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில், அனுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறி, எதிர்திசையில் பயணித்த அம்பியூலன்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளது.
விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி, அவரது உதவியாளர், அம்பியூலன்ஸில் பயணித்த சுகாதார அதிகாரி மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் முதலில் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கல்கமுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், அம்பியூலன்ஸ் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திவுல்லேகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லொறியில் பயணித்த இரண்டு பெண்களும் விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அம்பன்பொல வைத்தியசாலையில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லொறியின் சாரதி அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாஹோ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










