மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும்
இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள டொலர் கையிருப்பைப் பயன்படுத்தாமல் மாற்று முறைகளின் ஊடாக வாகனங்களை இறக்குமதி செய்வது எப்படி என்பதை ஏற்கனவே அரசாங்கத்திற்கு எடுத்துசுட்டிக்க்காட்டியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வற் வரி விதிப்பினால் வாகன இறக்குமதியாளர்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்