-மஸ்கெலியா நிருபர்-
கொட்டகலை பிரதேசத்தில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்கள் 2000 பேருக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதன் 2ஆம் கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், ஹரிங்டன். வூட்டன்மற்றும் பெரக்கும்புர வித்தியாலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்களான கண்ணதாசன், ரவிச்சந்திரன் ஆகியோரால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.