14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட 49 வயதுடைய பாடசாலை ஆசிரியைக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஆசிரியைக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 750,000 ரூபாய் இழப்பீடு செலுத்தப்பட வேண்டும்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை, மாணவனைப் பாடசாலையிலிருந்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண், மொனராகலை ஹிந்திக்கிவுல பகுதியில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.










